Breaking News

ஒரே படத்தில் இணையும், ரஜினி – கமல்!

ஒரே படத்தில் இணையும், ரஜினி – கமல்!

கமலும், ரஜினியும், ஆரம்ப காலத்தில், பல படங்களில் இணைந்து நடித்தனர். ஒரு கட்டத்தில், தனித்தனியாக நடிக்க துவங்கினர். அதன்பிறகு, அவர்களை இணைத்து படம் இயக்க, பலரும் முயற்சித்தபோதும், அது பலன் கொடுக்கவில்லை.

இந்நிலையில், விக்ரம் படத்தில் நடித்த, கமலஹாசன், மீண்டும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை தயாரிக்கப் போகிறார். அந்த படத்தில், ரஜினி, ‘ஹீரோ’வாக நடிக்கிறார்.

ரஜினியும்,கமலும் இணைந்து நடிப்பர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினி நடிக்கும் படத்தை தயாரித்து, அவருடன் இணையப் போகிறார், கமல்ஹாசன்.