Breaking News

கேம்பிரிட்ஜில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - Te Aroha வில் ஒருவர் கைது...!!!

கேம்பிரிட்ஜில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - Te Aroha வில் ஒருவர் கைது...!!!

இன்று அதிகாலை Cambridge இல் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

அதிகாலை 1.20 மணியளவில் குறித்த பெண்ணின் மரணம் அறிவிக்கப்பட்டதையடுத்து அவசர சேவைகளால் Richmond சாலையில் உள்ள ஒரு வீட்டில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் Te Aroha வில் ஒரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலை விசாரணையைத் தொடங்கிய பொலிசார், அந்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். 

"இது எங்கள் Te Aroha மற்றும் கேம்பிரிட்ஜ் சமூகங்களுக்கு ஒரு துன்பகரமான சம்பவம் என்பதை நாங்கள் அறிவோம், மேலும் அவரைக் கண்டுபிடிக்க நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டபோது அவர்கள் ஒத்துழைப்பு வழங்கியமைக்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.