Breaking News

இன்று ஜனாதிபதியை சந்திக்கிறது சுதந்திரக் கட்சி

இன்று ஜனாதிபதியை சந்திக்கிறது சுதந்திரக் கட்சி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்

இதன்போது, சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஏற்றுக் கொண்டுள்ளார்.

 பொருளாதாரம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஒன்றிணையுமாறு ஜனாதிபதி சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்துமூலம் கோரியிருந்தார்.

 இந்தநிலையில், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக் கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கூட்டணி தீர்மானித்துள்ளதாக சஜித் பிரேமதாச அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவொன்று நாளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது.

இதேவேளை, காலவரையறை அற்ற சர்வகட்சி அரசாங்கத்தில் பங்களராக போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.