Breaking News

South Island இல் இருந்து ‌Rangiora நோக்கி சென்று காணமல் போன விமானம் கண்டுபிடிக்கப்பட்டது..!!

South Island இல் இருந்து ‌Rangiora நோக்கி சென்று காணமல் போன விமானம் கண்டுபிடிக்கப்பட்டது..!!

South Island நகர் பகுதியான Franz Josef இல் இருந்து இன்று காலை புறப்பட்டு சென்று தெற்கு ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போனதாக கூறப்படும் சிறியரக விமானம் Nicholson மலையின் அருகில் கீழே விழுந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மோசமான வானிலை காரணமாக தேடுதல் குழுவினரால் அப்பகுதியை அணுக முடியவில்லை.

இன்று காலை 9 மணியளவில் ஃபிரான்ஸ் ஜோசப்பில் இருந்து Rangiora இற்கு புறப்பட்ட‌ குறித்த சிறியரக விமானம் காணாமல் போனது.

தற்போது நிலவும் "மோசமான வானிலை" காரணமாக விமானம் இருக்கும் பகுதிக்கு பணியாளர்கள் செல்வது மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது.

கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மீட்பு ஹெலிகாப்டர் மூலம் இந்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.