Breaking News

நியூசிலாந்தின் இன்றைய கொவிட் நிலவரம்...!!!

நியூசிலாந்தின் இன்றைய கொவிட் நிலவரம்...!!!

நியூசிலாந்தில் இன்று 6440 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 28 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களில் இறப்பிற்கான காரணம் அல்லது பங்களிப்புச் செய்யும் காரணி கொவிட் தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1589 ஆகும்.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 11 பேர் உட்பட 704 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் எல்லையில் 270 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.