Breaking News

20 நாள் குழந்தை ஜனாஸா எரிப்பு வழக்கு நாளை - ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆஜராகிறார்

20 நாள் குழந்தை ஜனாஸா எரிப்பு வழக்கு நாளை - ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆஜராகிறார்

இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.     

முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அவரே நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்.

இருபது நாட்களேயான குழந்தையின் ஐனாஸாவை (தகனம்) எரித்ததற்கு எதிரான இந்த உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நாளை (22) வெள்ளிக்கிழமை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இருபது நாள் குழந்தையின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் பல பாகங்களிலும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, லண்டன், ஜேர்மன், இந்தியா போன்ற நாடுகளிலும் கண்டனப் பேரணி்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.