Breaking News

ரொம்ப நேரம் வெய்ட் பண்ண மாற்றுத் திறனாளி ரசிகர்.. வேகமா வந்த கோலி கொடுத்த அசத்தல்

ரொம்ப நேரம் வெய்ட் பண்ண மாற்றுத் திறனாளி ரசிகர்.. வேகமா வந்த கோலி கொடுத்த அசத்தல்

தனக்காக காத்திருந்த மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவருக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றினை   வழங்கியவிராட் கோலி

தனக்காக காத்திருந்த மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவருக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றினை   விராட் கோலி வழங்கிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலி மைதானத்தில் கடந்த மார்ச் நான்காம் தேதி துவங்கியது. கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டி என்பதாலும் ரோஹித் ஷர்மா கேப்டன் பதவிக்கு வந்திருப்பதாலும் பரபரப்புடனே இந்த மேட்ச் துவங்கியது.

100வது டெஸ்டில் விளையாட காத்திருந்த கோலிக்கு மைதானத்தில் கோல்டன் கேப்-ஐ நினைவுப் பரிசாக வழங்கி கவுரவப்படுத்தினார் இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட். இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி தனது மனைவியுடன் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பேசிய டிராவிட், "டெஸ்ட் போட்டியில் 100 போட்டிகள் என்பது மைல்கல், அந்த சாதனையை நீங்கள் படைத்துள்ளீர்கள்" என கோலியை பாராட்டினார். இதனை அடுத்து கிரிக்கெட் வாரியம், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிப்பதாக கோலி தெரிவித்தார்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, ரிஷப் பண்ட், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் காட்டிய அதிரடியில் இந்திய அணியின் ஸ்கோர் கிடுகிடுவென ஏறியது. இதனால் முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இந்தியா.

அடுத்து ஆடிய இலங்கை அணியால் முதல் இன்னிங்சில் 174 ரங்களும் இரண்டாவது இன்னிங்சில் 178 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் பின்னர் மேட்ச் முடிந்து வீரர்கள் பயணிக்கும் பேருந்தில் ஏற, விராட் கோலி சென்று கொண்டிருந்தார். அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல ரசிகரான தரம்வீர் பால் கோலியை சந்திக்க காத்திருந்தார். பேருந்தில் ஏறுவதற்கு முன்னர், தரம்வீரை பார்த்த கோலி, உடனடியாக அவரை நோக்கி வந்தார். பாலிடம் தனது டி-ஷர்ட் ஒன்றினை கோலி வழங்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் பால். அவரது டிவிட்டர்  குறிப்பில்," விராட் கோலியின் 100 வது  போட்டியில் அவரிடம் இருந்து டி -ஷர்ட்டை பரிசாக பெற்று இருக்கிறேன். வாவ்" என அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை சந்திக்க காத்திருந்த மாற்றுத் திறனாளி ரசிகருக்கு கோலி பரிசு வழங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.