Breaking News

Palmerston North அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார் - ஒருவர் பலி...!!!

Palmerston North அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார் - ஒருவர் பலி...!!!

Palmerston North அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

புதன்கிழமை (26) மாலை 5.10 மணிக்கு சற்று முன்னர் Gillespies Line க்கும் Rongotea சாலைக்கும் இடையே உள்ள ஒரு பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் Kairanga Bunnythorpe சாலை மூடப்பட்டது ஆனால் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து தீவிர விபத்து பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.