Breaking News

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.40 பில்லியன் நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.40 பில்லியன்  நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

கடந்தாண்டு பெரும் போகத்தில் சேதமடைந்த பயிர் களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் 40 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக விவசாயிகளிட மிருந்து இன்று முதல் ஒரு கிலோகிராம் நெல்லை 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெரும் போகத்தில் நெல் அறுவடை குறையும் பட்சத் தில், விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக ஒரு கிலோ நெல்லுக்கு 25 ரூபா வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் அறிவித்துள்ளார்.