Breaking News

இன்று நியூசிலாந்தில் 25 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம்...!!!

இன்று நியூசிலாந்தில் 25 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம்...!!!

இன்று சமூகத்தில் 25 கொவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன அவற்றில் 10 தொற்றுகள் ஓமிக்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்றைய சமூக தொற்றுகளில் நார்த்லேண்டில் ஒருவரும், ஆக்லாந்தில் 18 பேரும், பே ஆஃப் பிளெண்டி 2 பேரும், லேக்ஸில் 2 பேரும், மிட் சென்ட்ரலில் ஒருவரும், மற்றும் நெல்சன் மார்ல்பரோவில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tauranga வில் இரண்டு ஓமிக்ரான் தொற்றுகள் இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மற்றொரு ஒமிக்ரோன் தொற்றாளர் நெல்சன் டாஸ்மானில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பதிவான ஒமிக்ரோன் தொற்றுகளில் ஆறு ஒமிக்ரோன் தொற்றுகள் ஆக்லாந்தில் பதிவாகியுள்ளன.

இதனிடையே நாட்டின் எல்லையில், இன்று 37 கொவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மேலும் மருத்துவமனையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களின் சராசரி வயது 62 ஆகும்.

இந்நிலையில் நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்படுத்தலில் 50 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.