Breaking News

நோர்த்லேண்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி....!!!

நோர்த்லேண்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி....!!!

இன்று காலை நோர்த்லேண்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காலை 8.40 மணியளவில் Waipu நகரத்தில் நோவா ஸ்கோடியா டிரைவ் மற்றும் யுரேடிட்டி சாலை சந்திப்பில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக அவசர சேவைகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த விபத்தில்  ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தீவிர விபத்து பிரிவு பொலிஸார் விபத்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தை அடுத்து நோவா ஸ்கோடியா டிரைவிற்கு மாற்றாக The Braigh அல்லது Shoemaker சாலையைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.