Breaking News

டிசம்பரில் பணவீக்கம் 14% ஆக அதிகரிப்பு!

டிசம்பரில்  பணவீக்கம் 14% ஆக  அதிகரிப்பு!

நவம்பரில் 11.1%ஆக இருந்த பணவீக்கமானது டிசம்பரில் 14% ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உணவு மற்றும் உணவு அல்லாத வகை பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை உணவுப் பணவீக்கமானது நவம்பரில் 16.9% ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 21.5% ஆக அதிகரித்துள்ளது.

மேலும் உணவு அல்லாத பண வீக்கமானது நவம்பரில் 6.2% ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 7.6% ஆக அதிகரித்துள்ளது.

உணவு வகைகளில், காய்கறிகள், அரிசி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், உணவகங்கள்,  ஹோட்டல்கள் மற்றும் மதுபானங்கள், புகையிலை ஆகியவற்றில் இந்த மாதத்தில் காணப்பட்ட விலை அதிகரிப்பு காரணமாக, உணவு அல்லாத வகை பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.