Breaking News

இந்திய பெருங்கடல் பகுதியில் ரஷியா - சீனா - ஈரான் கூட்டு போர் பயிற்சி...!!!

இந்திய பெருங்கடல் பகுதியில் ரஷியா - சீனா - ஈரான் கூட்டு போர் பயிற்சி...!!!

இந்திய பெருங்கடல் பகுதியில் ரஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து நேற்று கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன.

இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை குறைக்கவும், தங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கவும் ரஷியா, ஈரான், சீனா இந்த கூட்டு போர் பயிற்சில் ஈடுபட்டன.

இந்த 3 நாடுகளின் கடற்படைகளும் கடைசியாக 2019-ம் ஆண்டு டிசம்பரில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. இப்போது 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த நாடுகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுயிருப்பது இந்திய பெருங்கடல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பயிற்சியில் ஈரானின் 11 கப்பல்களும், ரஷியாவின் 3 கப்பல்களும் சீனாவின் 2 போர் கப்பல்களும் பங்கேற்றன.

கூட்டு ராணுவ பயிற்சி தொடர்பாக 3 நாடுகளின் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம். மேலும் இந்த கூட்டுப் பயிற்சியின் போது, ​​நடுக்கடலில் தீப்பிடித்து எரியும்  போர்க்கப்பலை எப்படி மீட்பது, கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பது, இரவு நேர போர் காலங்களில் இலக்குகளை சரியாக எப்படி தாக்குவது போன்ற பல போர் தந்திரங்கள் வீரர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.