மக்கள் வங்கி அவமானப்படுத்தப்பட்டமைக்கு அமைச்சரவையே காரணம் என ஓமல்பே சோபிததேரர் தெரிவித்துள்ளார்.
உரிய உரப்பரிசோதனையை மேற்கொள்ளாமல் எல்சி ஆவணத்தை திறந்ததை இராஜதந்திர நெருக்கடியை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து அனேக பொருட்கள் சீனாவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன அதேபோல அனேகமான பொருட்கள் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உடனடியாக விசாரணையை மேற்கொண்டு இராஜதந்திர பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.