Breaking News

ஆக்லாந்தில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர் ஒரு இலங்கை இஸ்லாமிய பிரஜை

ஆக்லாந்தில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர் ஒரு இலங்கை இஸ்லாமிய பிரஜை

ஆக்லாந்தில் இன்று கவுன்டவுன் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு பலரை காயப்படுத்தியவரை பொலிஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் நியூசிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் அக்டோபர் 2011 இல் நியூசிலாந்திற்கு வந்த இலங்கை இஸ்லாமிய பிரஜை பயங்கரவாதி என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் வெளிப்படுத்தினார்.

பயங்கரவாதி இஸ்லாமிய அரசால் ஈர்க்கப்பட்ட ஒரு வன்முறை சித்தாந்தத்தை வைத்திருப்பதாக பிரதமர் கூறினார்.

இது அர்த்தமற்ற தாக்குதல் என்றும் அது நடந்ததற்கு வருந்துகிறேன் என்றும் பிரதமர் ஆர்டெர்ன் கூறினார்.

இன்று நடந்த ஒரு தனிநபரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பவம் வெறுக்கத்தக்கது.மேலும் தாக்குதல் தொடங்கிய 60 வினாடிகளில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பிரதமர் ஆர்டெர்ன் கூறினார்.