18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் ஜூலை மாதத்திற்குள் அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் பாடசாலை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மிகவும் முக்கியம் என்று சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார்.
இதன் மூலம் அதிகரித்து வரும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.