Breaking News

வடக்கில் மேலும் ஒரு பல்கலைக்கழகம் - வர்த்தமானி வெளியானது

வடக்கில் மேலும் ஒரு பல்கலைக்கழகம்  - வர்த்தமானி வெளியானது

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், 'இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயர் அமுலாகும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.