நடிகை சாய் பல்லவி தற்போது ஹிந்தியில் ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். ரன்பீர் கபூர் அதில் ராமர் ரோலில் நடிக்கிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தும் கூட சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சாய் பல்லவி சீதை ரோலில் நடிக்க சில விஷயங்களை செய்து வருகிறார், அதாவது ராமாயணம் படத்தில் நடித்து வருவதற்காக சைவமாக மாறி உள்ளதாகவும், அவர் எங்கு சென்றாலும் சைவ உணவுகளை மட்டுமே சமைக்க சமையல்காரர்கள் கூட்டி செல்வதாகவும், சாய்பல்லவி ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை தன்னுடைய எக்ஸ் தளத்தில் டேக் செய்த சாய் பல்லவி அந்த பதிவில் கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.
"என்னை பற்றி இப்படி பொய்யான தகவல்கள் வரும்போது நான் பலமுறை, கிட்டத்தட்ட எல்லா முறையும், அமைதியாக தான் இருந்திருக்கிறேன். இதை அவர்கள் உள்நோக்கத்துடன் செய்கிறார்களா என்பது கடவுளுக்கு தான் தெரியும்."
"இது தொடர்கதையாகிவிட்ட விட்டது, நிற்பது போல தெரியவில்லை என்பதால் நான் இதற்கு பதில் அளிக்க இது தான் நேரம்."
"என் படங்கள் ரிலீஸ், அறிவிப்புகள் வரும்போது, என் கெரியரில் முக்கிய நேரங்களில் இப்படிப்பட்ட வதந்திகள் வருகிறது."
"இது போல பொய்யான செய்திகள், கிசுகிசுக்கள் இனிமேல் வந்தால் நான் சட்டப்படி தான் சந்திப்பேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.