Canterbury இன் Burnham அருகே மாநில நெடுஞ்சாலை 1 க்கு அருகில் பாரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் 1.30 மணியளவில் Telegraph சாலையின் சந்திப்புக்கு அருகில் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
ஐந்து ஹெலிகாப்டர்கள், 22 டிரக்குகள், டேங்கர்கள் ஆகியவை தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்கவும், தீயணைப்பு வீரர்களின் அறிவுரைகளை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி நிருபர் - புகழ்