நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் பல வருடங்களாக காதலித்து குடும்பத்தினர் ஒப்புதல் உடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் நான்கே வருடங்களில் திருமணத்தை முறித்துக்கொண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
அதற்கான காரணம் என்ன என்பதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் அதன் காரணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது.
இந்நிலையில் நாக சைதன்யா சில தினங்களுக்கு முன் சோபிதா என்ற நடிகையை இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறார். விவாகரத்திற்கு பின் சமந்தா நடிப்பிலும், உடல் நலத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், சமந்தா அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, தனது நாய் சாஷா உடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு "சாஷா லவ் போல வேறு எந்த லவ் இல்லை" என பதிவிட்டுள்ளார்.
தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. நாக சைதன்யாவை தாக்கி தான் இப்படி சமந்தா கூறி இருக்கிறார் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.