Breaking News

நாக சைத்தன்யா-சோபிதா திருமணம் எந்த இடத்தில் நடக்கிறது தெரியுமா?

நாக சைத்தன்யா-சோபிதா திருமணம் எந்த இடத்தில் நடக்கிறது தெரியுமா?

நாக சைத்தன்யா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சமந்தாவால் அறியப்பட்டவர்.

இவர் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் சமந்தா மூலம் தான் அறியப்பட்டார். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு இப்போது பிரிந்துவிட்டனர்.

அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். சமந்தா பிஸியாக தனது கெரியரில் கவனம் செலுத்த நாக சைத்தன்யா மறுமணத்திற்கே தயாராகி விட்டார்.

நாக சைத்தன்யா பிரபல நடிகை சோபிதாவை காதலிக்கிறார் என கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென இருவரும் நிச்சதார்த்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

கடந்த சில வாரங்களாக இவர்களின் திருமணம் பற்றிய பேச்சு சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.

நாக சைத்தன்யா-சோபிதா திருமணம் ராஜஸ்தானில் நடக்கும் என கூறப்பட்ட நிலையில் இவர்களின் திருமணம் நடக்கவிருக்கும் இடம் பற்றிய புதிய தகவல் வந்துள்ளது.

அதாவது ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் தான் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.