Breaking News

களவாணி படத்தில் ஹீரோவாக நடித்த KGF யாஷ் - ஜோடியும் ஓவியா தானா...??

களவாணி படத்தில் ஹீரோவாக நடித்த KGF யாஷ் - ஜோடியும் ஓவியா தானா...??

இயக்குநர் சர்குணம் இயக்கி 2010ல் விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல நடித்து வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் களவாணி.

இப்படம் வெளியானதை அடுத்து அடுத்த ஆண்டே கன்னட கொழியில் கிராதகா என்ற பெயரில் வெளியானது. கன்னட இண்டஸ்ட்ரி அதலபாதாளத்தில் இருந்த சமயத்தில் இப்படம் கன்னட சினிமாவில் 3000வது படமாக ரிலீஸ் ஆனது.

இதில் என்ன ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் இப்படத்தின் கதாநாயகனாக KGF படத்தின் மாஸ் ஹீரோ யாஷ் தான் நடித்திருக்கிறார். 13 ஆண்டுகளுக்கு முன் 2011ல் இப்படம் வெளியான போது யஷ் சிறு நடிகராக அறிமுகமாகி நடித்துக்கொண்டிருந்தார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக களவாணி படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஓவியா தான் நடித்துள்ளார். தற்போது இந்த விஷயம் வெளியாகி ஓவியா மட்டும் அப்படத்தை பயன்படுத்தி கன்னட சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்திருகலாம் என்று கருத்துக்கள் எழுந்து வருகிறது.