Invercargill மற்றும் Dunedin இல் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் விளைவாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட Comanchero கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
35 முதல் 63 வயதுக்குட்பட்ட இந்த குழு Comancheros கும்பலின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் விளைவாக வீட்டில் தயாரிக்கப்பட்ட டேசர்கள் மற்றும் பல மின்னணு சாதனங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைதி செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளதாக டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் நிக்கோலா ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.
செய்தி நிருபர் - புகழ்