Breaking News

பாலிக்கான விமான சேவைகளை ரத்து செய்த பல சர்வதேச விமான நிறுவனங்கள்..!!

பாலிக்கான விமான சேவைகளை ரத்து செய்த பல சர்வதேச விமான நிறுவனங்கள்..!!

இந்தோனேசியாவில் உள்ள பாலி சுற்றுலா தீவுக்கான விமான சேவைகளை பல சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எரிமலை சாம்பல் வானில் 10 கிலோ மீற்றர் உயரத்திற்கு படர்ந்து காணப்படுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பாலிக்கு விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டதாக விமான சேவைகள் தெரிவித்துள்ளன.

கடந்த 04-11-2024ஆம் திகதி முதல் 12-11-2024 ஆம் திகதி வரை சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கான 80 விமானங்கள் பாலியில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.