இந்தியா: தமிழ்நாடு
வி.கே. சசிகலா திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்தார்.
அப்போது அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசு அமைந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் மக்களுக்கு செய்ய வேண்டியது எதையுமே திமுக அரசு செய்யவில்லை.
தமிழகம் முழுவதும் கொலைகள் அதிகமாக அதிகமாக உள்ளது. பெண்கள் மாலை 5 மணிக்கு மேல் வெளியில் போக முடியவில்லை. சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது.
மக்களுக்கு நல்லது செய்வதை போன்று பிம்பத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். மக்கள் அனைத்தையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இது 2026 தேர்தலில் எதிரொலிக்கும்.
அரசியல் சூழ்நிலை எப்போதும் போல தான் உள்ளது. புதிய கட்சிகள் தொடங்கியவர்கள் பற்றி 2026-ம் ஆண்டு தான் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.