Breaking News

இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று...!

இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று...!

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளது.

22 தேர்தல் மாவட்டங்களில் இன்று (14.11.2024) காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

 இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று (14) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இவ்வருட தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு அனைத்தும் தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் 8500 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் வாக்களிக்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகும்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

அத்தோடு, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 3346 சுயேட்சைக் குழுக்களும் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் வந்துள்ளன.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குப்பெட்டிகள் பெறப்பட்ட பின்னர் இரவு 7.15 மணிக்குப் பின்னர் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், பொதுத் தேர்தல் செயலகத்தால் தேர்தல் தொகுதிகள் மற்றும் மாவட்டங்களின் முடிவுகள் மீள் பரிசீலனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என்பதால் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.