Breaking News

உணவு விஷமடைந்ததால் Canterbury பல்கலைகழக மாணவர்கள் நோய்வாய்ப்பட்ட சம்பவம் - வெளியான காரணம் ..!!

உணவு விஷமடைந்ததால் Canterbury பல்கலைகழக மாணவர்கள் நோய்வாய்ப்பட்ட சம்பவம் - வெளியான காரணம் ..!!

Canterbury பல்கலைகழக மாணவர்களுக்கு உணவு விஷம் ஏற்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

துண்டாக்கப்பட்ட கோழி இறைச்சியை பாதுகாப்பற்ற முறையில் தயாரித்ததால் மாணவர்களுக்கு உணவு விஷமடைந்தாக நியூசிலாந்து உணவு பாதுகாப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

கடந்த 4 ஆம் திகதி யூனிஹால் மற்றும் Ilam அடுக்குமாடி குடியிருப்புகளில் வழங்கப்பட்ட இரவு உணவை சாப்பிட்ட 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட மாணவர்களின் மல மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதை அடுத்து , க்ளோஸ்ட்ரிடியம் பெர்பிரிங்ஜென்ஸ் என்ற பாக்டீரியா தான் நோய் நிலைமைக்கு காரணம் என அடையாளம் காணப்பட்டதாக நியூசிலாந்து உணவுப் பாதுகாப்பு துணை இயக்குநர் வின்சென்ட் அர்பக்கிள் தெரிவித்தார்.

இந்நிலையில் Canterbury பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் செயல் தலைவர் காலேப் பேங்க்ஸ் கூறுகையில், நடந்த சம்பவத்தால் சங்கம் ஏமாற்றம் அடைந்துள்ளது.

"எல்லா நேரங்களிலும் மிக உயர்ந்த சுகாதாரத் தரங்கள் அடையப்படுவதை உறுதி செய்வதற்காக, பல்கலைக்கழக மண்டபத்தில் கேட்டரிங் சேவையை வழங்குவதற்குப் பொறுப்பான மூத்த நிர்வாகத்துடன் எங்கள் நிர்வாகி தொடர்ந்து பணியாற்றுகிறார்.

"எம்பிஐயின் விசாரணைக்கு அவர்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என அவர் தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட எங்கள் மாணவர்கள் குணமடைந்து அவர்களுக்குத் தேவையான நலன் உதவிகள் மற்றும் கல்வி ஆதரவு வழங்கப்படுவதை கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் மாணவர்களின் நல்வாழ்வு எங்கள் முன்னுரிமையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்