Breaking News

கலைஞர் சிலைகள் உடைக்கப்படும் - சீமான் பேச்சால் சர்ச்சை...!!

கலைஞர் சிலைகள் உடைக்கப்படும் - சீமான் பேச்சால் சர்ச்சை...!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுக ஆட்சியில், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் உதயசூரியன் சின்னம் தான் உள்ளது.

வங்கதேசத்தை உருவாக்கிய முஜீப் உர்-ரஹ்மான் சிலைகள் உடைக்கப்பட்டன. ஆந்திராவிலும் இதேபோன்றுதான் ஜெகன்மோகன் ரெட்டி, பல இடங்களில் அவரது தந்தை ராஜசேகர் ரெட்டியின் பெயரை வைத்தார்.

அதை தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இருந்தபோதே இங்கு இடித்து தரைமட்டமாக்கினர். எனவே, தமிழ்நாட்டில் அதிகாரம் வேறொருவருக்கு மாறாதா, நல்ல தன்மானமுள்ள தமிழ் மகனிடம் போனால் அனைத்தும் அதேபோல் பொட்டல் ஆகிவிடும். அதனால் பார்த்து ஆடனும்.” எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு சர்ச்சையாகியுள்ளது.