Breaking News

47வது அதிபராகும் வாய்ப்பு கமலா ஹாரிஸிற்கு உள்ளது - டிரம்ப்..!

47வது அதிபராகும் வாய்ப்பு கமலா ஹாரிஸிற்கு உள்ளது - டிரம்ப்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 47 வது அதிபராக வரும் ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ளார்.

அவருக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் கமலா ஹாரிஸ் என்ற நிலையில், தற்போது அவர் 47வது அதிபராக வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"ஜோ பைடன் ஒரு நல்ல அதிபராக இருந்தார். அவர் அறிவித்த ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார் என்பது எனக்கு மகிழ்ச்சி.

ஆனால் ஒரே ஒரு வாக்குறுதி மட்டும் மீதம் உள்ளது. அதை அவர் செய்வதற்கு தற்போது ஒரு வாய்ப்பு உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு ஜோ பைடன் தான் அதிபர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்த ஒரு மாத காலத்திற்கு அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் அவர்களை நியமனம் செய்ய வேண்டும்.

ஜோ பைடன் இந்த ஒன்றை செய்து, தனது கடைசி வாக்குறுதியையும் நிறைவேற்றினால், கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் 47 வது அதிபராகும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.