Breaking News

தேதி குறிச்சாச்சி... - ஜோ பைடனை சந்திக்கிறார் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்..!!

தேதி குறிச்சாச்சி... - ஜோ பைடனை சந்திக்கிறார் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்..!!

நடந்து முடிந்த அமெரிக்காவின் 47வது ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பெரும் வெற்றியை பெற்றார்.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் 13-ம் திகதி வெள்ளை மாளிகை செல்கிறார்.

இதேவேளை, டிரம்ப் வெற்றியை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ஜோ பைடன், அதிகார மாற்றத்தை சுமுகமாக நிறைவேற்றுவது தொடர்பில் விவாதிக்க வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த தகவலை வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு ஜோ பைடனை சந்திப்பது இது முதல் முறையாகும். 

தேர்தலுக்குப் பிறகு, பதவியில் இருந்து விலகும் ஜனாதிபதி மற்றும் பதவிக்கு வரவிருக்கும் ஜனாதிபதிக்கு இடையேயான இத்தகைய சந்திப்பு அமெரிக்காவில் வழக்கமாக உள்ள ஒன்றாகும்.