Breaking News

கோமாவில் இருக்கும் சத்யராஜின் மனைவி - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மகள்..!!

கோமாவில் இருக்கும் சத்யராஜின் மனைவி - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மகள்..!!

திரையுலகில் ஹீரோவாகவும், வில்லனாகவும் கொடிகட்டி பறந்தவர் சத்யராஜ். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ரஜினியின் கூலி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் மார்க்கெட் இழக்காத நாயகனாக இவர் 1979ஆம் ஆண்டு மஹேஸ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சிபி ராஜ் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மனைவி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக, அவர்கள் மகள் திவ்யா ஷாக்கிங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் "என் அம்மா கடந்த 4 வருடங்களாக கோமாவில் இருக்கிறார். PEG டியூப் வழியாக தான் உணவு கொடுக்கிறோம். நாங்கள் மொத்தமாக உடைந்துவிட்டோம், ஆனாலும் நம்பிக்கையாக அவர் குணமடைவார் என காத்துகொண்டு இருக்கிறோம். அம்மா திரும்ப கிடைப்பார் என எங்களுக்கு தெரியும். அப்பா கடந்த 4 வருடங்களாக single parent ஆக இருக்கிறார். அப்பாவின் அம்மா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார், நானும் அவருக்கு ஒரு single mom ஆக இருக்கிறேன். அப்பாவும் நானும் POWERFUL SINGLE MOMS CLUBல் இருக்கிறோம்" என திவ்யா மிகவும் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

தனது அம்மா குறித்து திவ்யா வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும், அவர் விரைவில் குணமடைந்துவிடுவார், அதற்காக வேண்டி கொள்கிறோம் என கமெண்டில் கூறி வருகிறார்கள்.