Breaking News

விஜய்யின் மாபெரும் வசூல் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன்...!!

விஜய்யின் மாபெரும் வசூல் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன்...!!

நடிகர் சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் மறக்கமுடியாத திரைப்படமாக மாறியுள்ளது அமரன். 3 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடி, 10 நாட்களில் ரூ. 200 கோடி என தொடர்ந்து வசூல் சாதனைகளை அமரன் படைத்து வருகிறது.

மேலும் முன்னணி நடிகர்களின் வசூல் சாதனைகளையும் அமரன் படம் முறியடித்து வருகிறது. ஆம், 10 நாட்களில் ரூ. 210 கோடிக்கும் மேல் வசூல் செய்து அஜித்தின் துணிவு படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ள நிலையில், தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது அமரன்.

கொரோனா காலகட்டத்தில் வெளிவந்த விஜய்யின் மாஸ்டர் படம் உலகளவில் ரூ. 235 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இந்த வசூலை சமீபத்தில் வெளிவந்த அமரன் திரைப்படம் 11 நாட்களில் ரூ. 242 கோடிக்கும் மேல் வசூல் செய்து முறியடித்துள்ளது.

தொடர் வசூல் மழையில் அமரன் படம் பட்டையை கிளப்பி வரும் நிலையில், இந்த வாரத்தின் இறுதியில் ரூ. 300 கோடி வசூல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறப்படுகிறது.