Breaking News

ஆக்லாந்தின் தெற்கு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற தீவிர விபத்து - ஒருவர் படுகாயம்...!!

ஆக்லாந்தின் தெற்கு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற தீவிர விபத்து - ஒருவர் படுகாயம்...!!

ஆக்லாந்தின் தெற்கு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற தீவிர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது.

மதியம் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தார்.

இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மிடில்மோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக  செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வடக்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலை தற்போது மூடப்பட்டுள்ளது, எனவே வாகன ஓட்டிகள், அப்பகுதியை தவிர்க்கவும், முடிந்தால், மாற்று வழியில் செல்லவும், பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்