ஆக்லாந்தின் North Shore பகுதியில் ஒரு இடத்தில் 208 கஞ்சா செடிகளை பொலிஸார் கண்டுபிடித்ததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Rothesay Bay இல் உள்ள ஒரு வீட்டில் அப்பகுதி மக்கள் கஞ்சாவின் கடுமையான வாசனையை உணர்ந்ததை அடுத்து, காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இருந்த கஞ்சா செடிகளை மீட்டதுடன், சம்பவ இடத்தில் ஒருவரை கைது செய்தனர்.
இதனிடையே மீட்கப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாக இன்ஸ்பெக்டர் சி.ஜே.மைல்ஸ் தெரிவித்தார்.
செய்தி நிருபர் - புகழ்