Breaking News

ஆக்லாந்து மால் கார்பார்க்கில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி..!!

ஆக்லாந்து மால் கார்பார்க்கில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி..!!

ஆக்லாந்து மால் கார்பார்க்கில் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் 12.20 மணியளவில் North Shore இல் உள்ள Glenfield Mall கார்பார்க்கில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்