இலங்கையில் ஊழல் மற்றும் மோசடிகளை தடுப்பதற்கு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுடன் நடத்திய சந்திப்பின் போது, பிரித்தானிய உயர்ஸ்தானிகர், இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் ஆட்சியை மேலும் மேம்படுத்தும் வகையில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்ற முறைமை குறித்து தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் இதன்போது முன்மொழிந்துள்ளார்.
பிரித்தானிய உள்ளூர் அரசாங்க அமைப்பு, மோசடி மற்றும் ஊழலைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச வருவாயை அதிகரிக்கும் அதே வேளையில் மோசடி மற்றும் ஊழலை எதிர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் தெரிவித்துள்ளார்.