Masterton அருகே உள்ள Waingawa என்ற இடத்தில் நேற்று இரவு கட்டிடம் ஒன்று தீ பற்றியதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வியாழன் இரவு 11.30 மணிக்குப் பிறகு Norfolk சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து Masterton மற்றும் Palmerston North ஆகியவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் இல்லை எனவும்,மேலும் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தீயணைப்பு ஆய்வாளர் இன்று சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
செய்தி நிருபர் - புகழ்