Breaking News

Rotorua வில் இடம்பெற்ற பயங்கர கொள்ளை சம்பவம் - மூவர் கைது..!!

Rotorua வில் இடம்பெற்ற பயங்கர கொள்ளை சம்பவம் - மூவர் கைது..!!

Rotorua வில் இடம்பெற்ற ஒரு பயங்கர கொள்ளை சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணியளவில் Rotorua வின் Owhata பகுதியில் Te Ngai Road Caltex Service Station க்குள் குற்றவாளிகள், கத்தி மற்றும் பிற ஆயுதங்களுடன் நுழைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் ஒரு ஊழியரை மிரட்டி, பணம், வேப் பொருட்கள் மற்றும் சிகரெட்டுகளை திருடினர். குற்றவாளிகள் பின்னர் ஒரு திருடப்பட்ட வாகனத்தில் சென்றுவிட்டனர்.

குறித்த வாகனம் ஹமில்டனில் இருந்து வாகனம் திருடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே  குற்றவாளிகளை பின்தொடர்ந்த பொலிஸார் மூன்று பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் Rotorua மற்றும் ஹமில்டனை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே திருடப்பட்ட வாகனம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்