இலங்கையில் பல்வேறு காரணங்களுக்காக வீசா இன்றி தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் கைது செய்து நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ள நபர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா, ரஷ்யா, மியான்மர், நைஜீரியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்த நாட்டுக்கு வந்து விசா இல்லாமல் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் பற்றிய தகவல்களை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நாட்டில் ஹோட்டல்களை நடத்தும் வெளிநாட்டவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.