Breaking News

இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்கள் தொடர்பில் எட்டப்பட்ட முடிவுகள்...!!

இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்கள் தொடர்பில் எட்டப்பட்ட முடிவுகள்...!!

இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கடற்றொழில் தொடர்பான இந்தியா - இலங்கை கூட்டு செயற்குழுவின் 6ஆவது கூட்டம் நேற்று (29) கொழும்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்திய அரசின் இந்திய மீன்வளத் துறையின் செயலர் அபிலக்சி லிகி தலைமையிலான இந்தியக் குழுவும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், வெளியுறவு அமைச்சகம், தமிழ்நாடு அரசு கடற்படை, கடலோர பொலிஸார், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், இலங்கையின் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம், கடற்படை, கரையோரக் காவல்படை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, கடற்றொழிலாளர் மற்றும் கடற்றொழில் துறை தொடர்பான அனைத்து தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும், விரிவான மீளாய்வை மேற்கொண்டதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இலங்கைக் காவலில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்குமாறு இலங்கை அரசை இந்தியத் தரப்பு இந்த சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளது.