இன்று காலை Whangārei இல் இடம்பெற்ற ஒரு மோசமான கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளை சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள் மூன்று குற்றவாளிகளை சுற்றி வளைத்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
காலை 7.30 மணிக்கு முன்னதாக Morningside இல் உள்ள ஒரு Dairy Shop இல் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிகரெட் மற்றும் இனிப்புகள் எடுத்துச் செல்லப்பட்டதாக Whangārei சிஐபியின் துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ஜான் கிளேட்டன் கூறினார்.
மூன்று குற்றவாளிகளும் கத்திகளை வைத்திருந்தனர்.
கொள்ளை சம்பவத்தை அடுத்து Raumanga வில் உள்ள ஒரு வீட்டை பொலிசார் சோதனை செய்ததாகவும், அங்கு மூன்று இளைஞர்களை கைது செய்து திருடப்பட்ட பொருட்களை மீட்டதாகவும் கிளேட்டன் கூறினார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரும் Whangārei இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி நிருபர் - புகழ்