Christchurch இல் நபர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Oxford Terrace இல் அதிகாலை 2 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர் மயக்கமடைந்தார் மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஆபத்தான நிலையில் இருந்தார் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 27 வயதான ஒருவர் Manchester St பகுதியில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் இன்று Christchurch மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
செய்தி நிருபர் - புகழ்