Breaking News

அதிபர் புதினுக்கு ரகசியமாக 2 மகன்கள் - வெளியான மறைக்கப்பட்ட உண்மை..!!

அதிபர் புதினுக்கு ரகசியமாக 2 மகன்கள் - வெளியான மறைக்கப்பட்ட உண்மை..!!

ரஷ்ய அதிபர் புதினுக்கு அவரது காதலியான அலினா கபேவாவுடன் இரண்டு மகன்கள் உள்ளனர். இவான் (9) மற்றும் விளாடிமிர் ஜேஆர் (5). அவர்களின் பிறப்பு மற்றும் வாழ்க்கைமுறைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் இளவரசர்களைப் போல ஸ்விட்சர்லாந்தில் வளர்க்கப்படுகிறார்கள். பொதுவெளியில் தோன்றுவது இல்லை. சொகுசு படகுகளிலும் பிரைவேட் ஜெட்களிலும் பயணிக்கின்றனர். வீட்டிலேயே பாடம் கற்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறார். புதின் அவரது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவு செய்வதில்லை. இவான் 2015-ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்திலும், விளாடிமிர் புதின் 2019-ல் மாஸ்கோவிலும் பிறந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த இடங்களையும் புதினே தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புதின் முன்னதாக பேசுகையில், குடும்பத்தைப் பற்றி நான் யாரிடமும் விவாதிப்பதில்லை.

அவர்களுக்கு தனியாக அவர்களது வாழ்க்கை இருக்கிறது, அதை அவர்கள் வாழ்கின்றனர். மக்கள் வெளிச்சத்தில் அவர்கள் இளவரசர்களைப் போல வாழ்வதை நான் விரும்பவில்லை எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.