Breaking News

பாடசாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து; 21 பேர் பாலி - கென்யாவில் சோகம்..!

பாடசாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து; 21 பேர் பாலி - கென்யாவில் சோகம்..!

கென்யாவில் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் மாணவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கென்யா நாட்டில் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பாடசாலை உள்ளது. குறித்த பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகினறனர்.

பாடசாலையில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் கடந்த 5ம் திகதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 17 மாணவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர், மேலும், 13 மாணவர்கள் பலத்த தீக்காயமடைந்தனர். 

 தீ விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 4 மாணவர்கள் உயிரிழந்தாகவும், இதனால் தீ விபத்தில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.