ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் உதவ முடியும் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இத்தாலிக்கு வருகை தந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மெலோனி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது, "சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டால், குழப்பமும் நெருக்கடியும் உருவாகும்.
சர்வதேச சட்ட விதிகளை மீறுவது உலகமயமாக்கலுக்கு எதிரானது. இதன் காரணமாகவே, ரஷியா-உக்ரைன் இடையிலான மோதலை நிறுத்த இந்தியா, சீனா போன்ற நாடுகளால் உதவ முடியும் என்று நான் நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகின்ற நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.