ஆக்லாந்தில் உள்ள முஸ்லிம் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மின்னஞ்சலுடன் அச்சுறுத்தும் காணொளி ஒன்றும் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட Al-Madinah பள்ளி மற்றும் Zayed கல்லூரி ஆகிய இரண்டு பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
அல்-மதீனா பள்ளியின் உதவி அதிபர் அம்ஜத் அலி கூறுகையில்...
நேற்று இரவு 11 மணியளவில் பள்ளி அதிபருக்கு ஒரு வீடியோ அனுப்பப்பட்டது.
அதில் ஒரு நபர் ஒரு காரில் துப்பாக்கியால் சுடும் காட்சி இடம்பெற்றிருந்ததாக அவர் தெரிவித்தார்.
நியூசிலாந்தின் இஸ்லாமிய சங்கங்களின் கூட்டமைப்பு (FIANZ) அப்துர் ரசாக், தான் அந்த வீடியோவைப் பார்த்ததாக கூறினார்.
"இது சாதாரண அச்சுறுத்தல் அல்ல. எங்களுக்கு இது 2019, மார்ச் 15 அன்று என்ன நடந்தது என்பதை நினைவூட்டுகிறது." என அவர் தெரிவித்தார்.
"இது மிகவும் கொடூரமானது மற்றும் அதைப் பெறும் எவரும் அதிர்ச்சியடைவார்கள்
இந்த அச்சுறுத்தல் அரசாங்கத்திற்கு ஒரு "விழிப்பு அழைப்பாக" இருக்க வேண்டும் என்று ரசாக் கூறினார்.
FIANZ ஒரு அறிக்கையில் மாணவர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் பரந்த சமூகத்தின் நல்வாழ்வு குறித்து அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி நிருபர் - புகழ்