Breaking News

பிரித்தானியாவில் அதிகரித்துள்ள பதற்ற நிலை - அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ரிஷி சுனக்...!

பிரித்தானியாவில் அதிகரித்துள்ள பதற்ற நிலை - அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ரிஷி சுனக்...!

பிரித்தானியாவில் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ரிஷி, தன் மனைவியுடன் அமெரிக்காவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளதாக பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், தன் மனைவி அக்‌ஷதா மூர்த்தியுடன் அமெரிக்காவிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றிற்குச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

குறித்த நட்சத்திர ஹோட்டல், சினிமா நட்சத்திரங்கள் உட்பட, பிரபலங்கள் அடிக்கடி செல்லும் ஒரு ஹோட்டல் என தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரிஷி குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியமர இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன.

ஆனால், இப்போது ஐந்து வார விடுமுறைக்காக ரிஷி தன் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.