உலகின் மிகவும் பணக்கார பூனை ஒரு இன்ஸ்டா ரீல்ஸ்க்கு ரூ.12 லட்சம் வருமானம் பெறுகிறது என்றால் நம்ப்ப முடிகின்றதா? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்.
இன்றைய சமூக ஊடக வளர்ச்சியில் உலா வரும் விலங்குகளின் சேட்டைகளை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள். அந்தவகையில் பலரையும் சமூக வலைதளங்களில் மகிழ்வித்து வரும் ஒரு பூனையின் பெயர் நளா.
இந்த பூனைக் குட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் மூலம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 லட்சத்தை சம்பாதிக்கிறது. இதுவரை ரூ.895 கோடியை சம்பாதித்து, உலகின் பணக்கார பூனையாக வலம் வருகிறது என்றால் பலருக்கும் நம்ப முடியாது.
நீங்க நம்பலனாலும் அதா நெசம். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு செல்லப்பிராணி விற்பனை மையத்தில்வாங்கியுள்ளார். அதன் இன்ஸ்டா பயணம். 2012ஆம் ஆண்டில் நளாவின் ஒரு செயலை இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்தார்.
அது பலரையும் ஈர்த்தது. இதனால், வியப்படைந்த அவர், பூனைக்குட்டி நளாவின் ஒவ்வொரு செயலையும் படம்பிடித்து, இன்ஸ்டாவில் பகிரத் தொடங்கினார். தற்போது நளாவின் பாலோயர்களின் எண்ணிக்கை 4.5 மில்லியனுக்கும் அதிகம்.
மேலும் சமூக ஊடகங்களுக்கு அப்பால், பூனை உணவு பிராண்ட் மூலமாகவும் நளா கணிசமான தொகையை சம்பாதித்து வருகிறதாம் இந்த பூனை.