இலங்கைக்கு 63 கணனி சாதனங்களில் மறைந்து வைத்து 5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கொண்டுவரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க கொள்கலன் முனையகம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
துபாய் நிபுன என்ற கடத்தல்காரரே இந்த போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.