Breaking News

இலங்கை வெளிநாட்டு கையிருப்பில் வீழ்ச்சி..!!

இலங்கை வெளிநாட்டு கையிருப்பில் வீழ்ச்சி..!!

இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களின் அளவில் 2024 ஜூலை மாதம் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கைகளின்படி. 2024 ஜூன் மாதம் 5,654 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பு 2024 ஜூலை மாதம் 0.1% குறைந்து 5,649 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் 5,574 மில்லியன் டொலராக இருந்தது.

இது ஜூன் மாதம் பதிவான 5,605 மில்லியன் டொலர்களை விட 0.6% குறைவாகும்.

இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் தங்க கையிருப்பு 35 மில்லியன் டொலரில் இருந்து 37 மில்லியன் டொலர்களாக 5.2% அதிகரித்துள்ளது.

இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான, சீன மக்கள் வங்கியின் அந்நியச் செலாவணி வசதியிலிருந்து பெறப்பட்டவை உள்ளடக்கப்பட்டுள்ளதுடன்,இதன் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.